இணையத்தில் உலவும் அத்தனை தமிழ் உலக நண்பர்களுக்கும் வணக்கம். தமிழ் வழியில் படித்து தகவல் தொழில் நுட்ப துறையில் நுழைந்திருக்கும் பல இளைஞர்களில் நானும் ஒருவன். அலுவலக வேலைகள் தவிர்த்து இணையம் பயன்படுத்தும் போது அதிகமாக பார்ப்பவை இரண்டு வகையான இணைய தளங்களே. ஒன்று தமிழ் இணையதளங்கள். மற்றது விளையாட்டு தளங்கள். அதனால் ஏன் தமிழ் இணைய விளையாட்டுகள் இங்கே இல்லை என்ற கேள்வி என் மனதை ரொம்ப காலமாக அரித்துக் கொண்டே இருந்தது. மென்பொருள் துறையிலேயே இருக்கும் நானே ஏன் இதை ஆரம்பித்து வைக்க கூடாது என தோன்றியதன் விளைவு புதிர் இணையதளம்.
"கோ கோ" நம் அனைவருக்குமே தெரிந்த விளையாட்டு. வேகமும் விவேகமும் ஒரு புள்ளியில் இணையும் அபூர்வம் அது. "கோ கோ" விளையாட்டின் தழுவலாக இந்த இணைய விளையாட்டை உருவாக்கியிருக்கிறேன். "கோ கோ" வின் சுவாரஸ்யமான அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சுற்றி இன்னும் கொஞ்சம் கதை பின்னியிருக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் பல விளையாட்டுகளும் பயனுள்ள இணைய தளங்களும் உருவாக்குவேன். இன்று பிள்ளையார் சுழியை விளையாட்டாய்(!) போட்டிருக்கிறேன். விளையாடி பார்த்தபின் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். உங்களுடைய நேரத்திற்கு நன்றி.
இணையதள முகவரி : http://www.khokho.pudhir.com/

No comments:
Post a Comment